இந்தியா

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

புது தில்லி: மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இறைச்சிக்கக மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், எஸ்.கே கவுல் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது  குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு  மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT