இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத்துக்கு முதல்வர் பழனிசாமியிடம் ஆதரவு கேட்ட மோடி!

DIN

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு, பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை முன்னிட்டு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் பாஜக கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட இருப்பது யார் என்று எதிர்க்கட்சியினர் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்தச் சூழலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவரும் பிகார் ஆளுநருமான ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை தில்லியில் நடைபெற்ற பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டத்திற்கு பின்னர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் தங்களுடைய கூட்டணி வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு கோரி, பிரதமர் மோடி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு ம்வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்குஅவர் வேண்டுகோள் விடுத்தார்.

அதே வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும், தங்களது கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT