இந்தியா

இளம்பெண் பலாத்கார சம்பவம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பு

DIN

பிகார் மாநிலம், லக்கிசராய் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர், 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் நிதீஷ் குமார், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சம்பந்தப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம், கொடிய குற்றமாகும். பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவை மாவட்ட காவல்துறை அமைத்துள்ளது என்றார் அவர்.
இது தொடர்பாக, சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள காவல் துறை அதிகாரி சுனில்குமார் ஜா கூறியதாவது:
லக்கோசாக் கிராமத்தைச் சேர்ந்த அந்தப் பெண், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது.
பின்னர், அந்த கும்பல், அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்று, உள்ளூர் ரயிலில் சிறிது தூரம் சென்ற பின்னர் தண்டவாளத்தில் அவரை வீசி விட்டுத் தப்பியோடிவிட்டது.
அந்தப் பெண், ரயில் தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்ததை மறுநாள் காலையில் பார்த்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக, பிகார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்தபடி அவர் அளித்த வாக்குமூலத்தில், தன்னை பலாத்காரம் செய்தவர்களில் 2 பேரின் அடையாளத்தைத் தெரிவித்தார். அவர்களில் ஒருவர், அதே கிராமத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்தப் பெண் அடையாளம் காட்டிய மற்றொரு குற்றவாளி, ஏற்கெனவே கொலை வழக்கில் சிக்கி தலைமறைவாக இருப்பவர். இந்த பலாத்காரச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சுனில்குமார் ஜா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT