முகப்பு
இந்தியா

பிகார் ஆளுநராக கே.என்.திரிபாடி பதவியேற்பு

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி (82), பிகார் ஆளுநராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பை ஏற்றார்.

Updated On : 23 ஜூன், 2017 at 12:29 AM
பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாருடன், மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்ற கேசரிநாத் திரிபாடி.
பகிர்:

மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி (82), பிகார் ஆளுநராக வியாழக்கிழமை கூடுதல் பொறுப்பை ஏற்றார்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் பதவியை பதவியை ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாடி, பிகார் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கூடுதல் பொறுப்பை ஏற்பதற்காக திரிபாடி புதன்கிழமை பாட்னாô வந்தார். அங்கு வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் அவருக்கு பிகார் ஆளுநராக பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சௌதரி உள்ளிட்டோர்ஸ கலந்து கொண்டனர்.
கேசரிநாத் திரிபாடி ஏற்கெனவே பிகார் ஆளுநர் பொறுப்பை கடந்த 2014 நவம்பர் 27 முதல் 2015 ஆகஸ்ட் 15 வரை கூடுதலாகக் கவனித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.