இந்தியா

எண்ணெய் டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்து: 148 பேர் பலி

DIN

பஹவல்பூர்: பாகிஸ்தானில் எண்ணெய் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானதில் 148 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் நெடுஞ்சாலையில் எண்ணெய் ஏற்றிச் சென்ற லாரி திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதைக் கண்ட அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளான லாரியின் ஓட்டுநரை மீட்க முயற்சி மேற்கொள்ளாமல், டேங்கர் லாரியிலிருந்து கசிந்த எண்ணெயைப் பிடிக்க முந்தியடித்துக் கொண்டு போட்டி போட்டனர். அப்போது, லாரியின் கொள்கலன்களிலிருந்து எரிபொருள் கசிந்து தீப்பிடித்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இதில் எண்ணெய்யை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் 148 பேர் தீ பிடித்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த 6 கார், 12 மோட்டார் சைக்கிள்களும் தீ விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்கொண்டு வந்தனர்.

தீயை அணைத்தப் பிறகு, சம்பவ இடத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலங்களை கண்டு சாலையில் சென்றவர்கள் கதறி அழுதனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட மருத்துவமனைக்கும் பஹாவல் விக்டோரியா மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நாளை ரம்ஜான் கொண்டாடப்படவுள்ள நிலையில், பாகிஸ்தானில் 140 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு சமூகவலைத்தளங்களில் "பயங்கரவாதம், விபத்து மற்றும் அலட்சியத்தினால் ஏகப்பட்ட உயிர்கள் அழிந்துவருவதாக" மக்கள் தங்கள் கொந்தளிப்பையும், ஆழ்ந்த வருத்தங்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT