இந்தியா

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை

DIN

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு ராஜாஜி நகர் சுகாதார ஆலயம் அறக்கட்டளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:}
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மீரா குமார், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தில்லிக்கு செல்ல உள்ளேன். தில்லியில் ஜூன் 28}ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும். ஆலோசனைக்கு பின்னர், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் அவர் பேசியது:}
யோகா பயிற்சி நமது நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், சர்வதேச அளவில் பரவியுள்ளது. சர்வதேச அளவில் மக்களால் போற்றப்படும் யோகா பயிற்சியை, நமது நாட்டில் பலர் பின்பற்றுவதில்லை என்பது வருத்தத்துக்குரியது.
மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு யோகா பயிற்சி சிறந்த மருந்து.
யோகா பயிற்சியை செய்வதற்கு வயது வித்தியாசம் எதுவுமில்லை.
யோகா பயின்ற எனக்கு, பணி அழுத்தம் காரணமாக அதனை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யோகா கலையை போற்றி பாதுகாக்க வேண்டும். யோகா பயிற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ கோபாலைய்யா, எம்எல்சி மோட்டம்மா, மாநகராட்சி நிலைக் குழுத் தலைவர் பத்ரகெளடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT