இந்தியா

ஒரே மாதிரியான தலைமைத்துவ பாணியை கொண்டுள்ள மோடி, டிரம்ப்

DIN

பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரே மாதிரியான தலைமைத்துவ பாணியைக் கொண்டுள்ளனர் என்று தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தற்போது அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மோடியையும், டிரம்பையும் ஒப்பிட்டு கிருஷ்ண சாகர் ராவ் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மோடியும், டிரம்பும் ஒரே மாதிரியான தலைமைத்துவ பண்புகளைக் கொண்டுள்ளனர். உலகம் தொடர்பான இருவரின் பார்வை, முடிவெடுக்கும் திறன், அரசியல் ஆர்வம், அரசு நிர்வாகத் திறன், பிரச்னைகள் மீதான முன்னுரிமை, அவற்றின் மீதான தீர்வுகள் உள்ளிட்ட விஷயங்களில் இருவரின் சிந்தனைகளும் ஒரே மாதிரியாக உள்ளன.
மேலும் ஊடகம், சட்டமியற்றும் துறை, நீதித் துறை உள்ளிட்டவற்றில் இருவரின் அணுகுமுறைகளும் ஒத்துப்போகின்றன என்று அந்த வலைப்பக்கத்தில் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரிக்கை

வேளாண் சிறப்பு அதிகாரி பணி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

‘முதல்வரின் மாநில இளைஞா் விருது’: மே 1-15 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு

போா் நிறுத்த திட்டத்துக்கு ஒப்புதல்: ஹமாஸிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

வாழைத்தாா் உறையிடுதல்: வேளாண் மாணவா்கள் செயல்விளக்கம்

SCROLL FOR NEXT