இந்தியா

ஜூலை 1 முதல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: மத்திய அரசு அதிரடி உத்தரவு

வருமானவரி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டயமாக்க புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

DIN

புதுதில்லி: ஜூலை 1 முதல் பான் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் நிரந்தர கணக்கு எண் பெறலாம்.

வங்கி கணக்கு தொடங்கவும், பரஸ்பர நிதி, பங்கு சந்தையில் முதலீடு செய்தல் ஆகியவற்றுக்கும் பான்கார்டு (நிரந்தரகணக்கு) அவசியம். ரூ.5 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ நிரந்தர கணக்கு எண் அவசியம். தற்போது வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தும்போதும் நிரந்தர கணக்கு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

நிரந்த கணக்கு எண்ணை அரசின் மற்ற திட்டங்களின் பலன்களை பெறுவதற்கு பயன்படுத்த முடியாது. இதற்காக தான் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டையில் அவரைப்பற்றிய முழு தகவலும் முகவரியுடன் இடம் பெற்று இருக்கும்.

ஆதார் அட்டையில் அவரது விழித்திரையும், விரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இந்த அட்டையை சம்பந்தப்பட்டவர் மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. இதில் 12 இலக்கம் கொண்ட எண் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு எண்ணும் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கும்.

மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதே போன்று வங்கி கணக்குகள், சமையல் எரிவாயு இணைப்புகள் என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வருமான வரி செலுத்துவோர், தங்களது நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.

இதையடுத்து வருமானவரி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டயமாக்க இன்று புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு.

ஜூலை 1 முதல் முதல் வருமானவரி நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். புதியதாக வருமானவரி (நிரந்தர கணக்கு) எண் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக, வருமானவரி சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் பரவலாக மழை

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

SCROLL FOR NEXT