இந்தியா

ஜார்கண்ட்:  முன்னாள் துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாநகர முன்னாள் துணை மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

தினமணி

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாநகர முன்னாள் துணை மேயர் நீரஜ் சிங் உள்ளிட்ட 4 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தின் முன்னாள் துணை மேயர் நீரஜ் சிங், நேற்று இரவு தன்பாத்தில் உள்ள ஸ்டேல் கேட் அருகே காரில் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை வழிமறித்து ஏ.கே.47 ரக துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் நீரஜ் சிங்குடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் காரில் உடன் இருந்த மெய்க்காப்பாளர்கள் 3 பேரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

நீரஜ்சிங் உடன் உயிரிழந்தவர்களில் ஒருவர் அவரது நண்பர் அசோக் யாதவ், கார் ஓட்டுநர் மற்றும் மெய்க்காப்பாளர் என தெரியவந்துள்ளது. நீரஜ் சிங் வந்த கார் மீது 50 புல்லட்கள் பாய்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீஸ் சூப்பிரண்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீரஜ் சிங் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT