இந்தியா

பன்னிரண்டு வயது கேரள சிறுவன்: இந்தியாவின் இளம் வயது தந்தை!

கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சிறுவன் ஒருவன் 17 வயதுடைய தன்னுடைய உறவுக்காரப்பெண் ஒருவரின் பெண் குழந்தைக்கு தந்தை ...

PTI

கொச்சி: கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சிறுவன் ஒருவன் 17 வயதுடைய தன்னுடைய உறவுக்காரப்பெண் ஒருவரின் பெண் குழந்தைக்கு தந்தை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இந்த சம்பவமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த சிறுமி காக்கநாடு பகுதி மருத்துவமனை ஒன்றில்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பொழுதுதான் தெரிய வந்தது. அனுமதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பது தெரிய வந்தவுடன் சிறுமி குறித்த அனைத்து தகவல்கலும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்த பொழுதுதான் அவளுடைய கர்ப்பத்திற்கு காரணம் அந்த 12 வயது உறவுக்கார சிறுவன் என்பது தெரிய வந்தது.

ஆனால் அந்த சிறுவனின் வயதை உத்தேசித்து கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை  கண்டறிய பிறந்த பெண்  குழந்தைக்கு டி.ஏன்.ஏ சோதனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், அந்த சிறுவனின் ரத்த மாதிரிகள் மற்றும் அந்த குழநதையின்  ரத்த மாதிரிகள் எடுத்து சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் சிறுவன்தான் அந்த நான்கு மாத குழந்தைக்கு தந்தை என்பது உறுதி செய்யப்பட்டதாக களமசேரி சரக காவல்துறை ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

தற்போது இருவருமே சட்டப்படி மைனர்கள் என்பதால் இருவர் மீதும் 'குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்' (போஸ்கோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT