இந்தியா

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை: தேர்தல் ஆணையம்

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; மிகவும் பாதுகாப்பானவை என்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; மிகவும் பாதுகாப்பானவை என்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாத வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் சமீபகாலமாக அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகே இந்தக் கேள்விகள் அதிக அளவில் எழத் தொடங்கியிருக்கின்றன.
உத்தரப் பிரதேசத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடைபெற்ற குளறுபடிகளே காரணம் என்று அங்குள்ள பிரதான எதிர்க்கட்சிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றன.
உண்மையிலேயே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகளை அரங்கேற்றவோ அல்லது அவற்றுள் ஊடுருவி வாக்குகளைத் திருடவோ முடியுமா? என சாமானிய மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்திருக்கின்றன.
ஆனால், இதுபோன்ற சந்தேகக் கேள்விகளுக்கே இடமேயில்லை என்று தேர்தல் ஆணையமும், தொழில்நுட்ப நிறுவனங்களும் திட்டவட்டமாக மறுக்கின்றன.
இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலமாகவே தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. உலக அளவில் இந்தியா, ஜெர்மனி, நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15-க்கும் குறைவான நாடுகளில் மட்டும்தான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வாக்குச்சீட்டுகளை ஒப்பிடும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நூறு மடங்கு பாதுகாப்பானவை. குறிப்பாக, இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடிகள் நடைபெற வாய்ப்பே இல்லை. ஏனெனில், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையத்துடனோ, கணிணிகளுடனோ இணைக்கப்படுவதில்லை. அவ்வாறு இணைக்கப்பட்டாலாவது, அவற்றுள் மர்ம நபர்கள் ஊடுருவ முடியும் என்று கூறலாம்.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், சாதாரண கால்குலேட்டர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமே இந்த இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஊடுருவுவதோ அல்லது முடக்குவதோ சாத்தியமற்றது.
எனவே, இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. இவற்றில் குளறுபடிகள் நடைபெற வாய்ப்பே இல்லை என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறப்பு மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

கல்வி உதவித்தொகை: நாளை முதல்வா் திறமைத் தேடல் தோ்வு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.79 கோடி

செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

SCROLL FOR NEXT