இந்தியா

விவசாயிகள் தற்கொலை குறித்து 4 வாரத்தில் அறிக்கை கொடுங்க: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

தினமணி

புதுதில்லி: நாடெங்கும் நிகழும் விவசாயிகள் தற்கொலை குறித்து நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடெங்கும் விளைச்சல் இன்மை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக ஆகி விட்டதாகவும், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கானது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.எஸ்.சந்திரசூட் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விபரம் வருமாறு:

நாடு முழுவதும் விளைச்சல் தொடர்பான பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது ஒருமுக்கியமான பிரச்சினையாகும். இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எனவே இது குறித்து விரிவான அறிக்கையொன்றை நான்கு வாரங்களில் மத்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT