இந்தியா

'காபி டே' கிளை ரெப்ரிஜிரேட்டரில் கரப்பான்: படமெடுக்க முயன்ற வாடிக்கையாளருக்கு 'பளார்' விட்ட பெண் ஊழியர்!  (வைரல் வீடியோ) 

தினமணி

ஜெய்ப்பூர்:  ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற 'காப்பி டே' நிறுவன கிளையொன்றில், குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி இருப்பதைப் படம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர் ஒருவரை, அந்நிறுவன பெண் ஊழியர் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அர்பன் வெர்மா. சட்டக் கல்லூரி மாணவரான இவர் இந்த மாத துவக்கத்தில் ஜெய்ப்பூரில் உள்ள  பிரபல 'காபி டே' கிளையொன்றுக்கு சென்றிருந்தார். அங்கே உள்ள குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சிகள் இரண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது கையிலிருந்த அலைபேசி கேமராவினால் அதனை படம் எடுக்க முயன்றார்.

அப்பொழுது அங்கு வந்த அந்நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அர்பன் வெர்மாவை தன் கையிலுள்ள அலைபேசியால் படம் எடுத்ததுடன், நேராக அவரை நோக்கி வந்து திடீரென்று அறைகிறார். பின்னர் அவரை திட்டவும் செய்கிறார். தற்பொழுது இந்த விடீயோவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள  'காபி டே' நிறுவனம், நடந்த சம்பவத்தின் முழுமையான விரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லையென்று உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. 

வீடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT