இந்தியா

தேசியக் கொடியை அவமதித்த சீன அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு

DIN

நொய்டா: தில்லி அருகே நொய்டாவில் இருக்கும் சீன செல்லிடப் பேசி நிறுவனத்தில் பணிபுரியும் சீன அதிகாரி ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சீன அதிகாரி ஒருவர், இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், அதை குப்பைத் தொட்டியில் வீசியதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீன நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT