விரைவில் காதலரை கரம் பிடிக்கிறார் இரோம் ஷர்மிளா: கேரளாவில் திருமணம்?
இரும்பு பெண்மணி என்று அறியப்படும் மணிப்பூரைச் சேர்ந்த போராளி இரோம் சானு ஷர்மிளா, தனது நீண்ட நாள் நண்பர், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மோன்ட் கௌடின்ஹோ (54)வை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிரைவில் காதலரை கரம் பிடிக்கிறார் இரோம் ஷர்மிளா: கேரளாவில் திருமணம்?
இரும்பு பெண்மணி என்று அறியப்படும் மணிப்பூரைச் சேர்ந்த போராளி இரோம் சானு ஷர்மிளா, தனது நீண்ட நாள் நண்பர், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மோன்ட் கௌடின்ஹோ (54)வை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குவகாத்தி: இரும்பு பெண்மணி என்று அறியப்படும் மணிப்பூரைச் சேர்ந்த போராளி இரோம் சானு ஷர்மிளா, தனது நீண்ட நாள் நண்பர், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மோன்ட் கௌடின்ஹோ (54)வை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில், விரைவில் இரோம் ஷர்மிளாவின் திருமணம் நடைபெறும் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், மணிப்பூர் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால், இரோம் ஷர்மிளா கடும் அதிருப்தி அடைந்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு தனது திருமணத்தை நடத்த இரோம் ஷர்மிளா திட்டமிட்டிருந்ததாக அப்போதே செய்திகள் அடிபட்டன. ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு, அவர் தனது திருமணம் குறித்து முடிவு செய்து விட்டதாக தற்போது கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பாஸ்போர்ட் கோரி இரோம் ஷர்மிளா விண்ணப்பித்திருந்ததும், அவர் பிரிட்டன் சென்று அங்கு திருமணம் செய்ய முடிவு செய்ததே காரணம் என்றும் தெரிகிறது.
ஆனால், பல ஆண்டு காலமாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி இருந்த நிலையில், அவரிடம் அரசு அடையாள அட்டை ஒன்றுகூட இல்லாததால், அவர் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
அதனால், தங்களது திருமணத்தை கேரளாவில் நடத்த இருவரும் முடிவு செய்திருப்பதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த டெஸ்மான்ட் கௌடின்ஹோ?
கடந்த 2009ம் ஆண்டு தீப்தி பிரியா மெஹ்ரோதாவால், இரோம் ஷர்மிளா பற்றி எழுதப்பட்ட பர்னிங் ப்ரிட்ஜ் என்ற புத்தகத்தைப் படித்த பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்மான்ட், அவரது போராட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
இரோம் ஷர்மிளாவுக்கு இது குறித்து அவர் கடிதம் எழுதியிருந்தார். இருவருக்குள் நல்ல நட்பு மலர்ந்தது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்த டெஸ்மான்ட், இம்பாலில், இரோம் ஷர்மிளாவை முதல் முறையாக சந்தித்தார்.
இது பற்றிய சர்ச்சைகள் எழும் போது, ஷர்மிளா டெஸ்மான்ட் பற்றி கூறும் போது, "ஆம், அவர் என்னை அதிகம் நேசிக்கிறார், என் மீது அக்கறை காட்டுகிறார்" என்று சொல்வார்.