முகப்பு
arunjetly
இந்தியா

கடன் வழங்குவதற்கான நடைமுறையில் துரிதம்: ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ஜேட்லி வேண்டுகோள்

வளரும் நாடுகளின் தேவையைக் கருதி, கடன் வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரியுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:28 PM
arunjetly
பகிர்:

வளரும் நாடுகளின் தேவையைக் கருதி, கடன் வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்துமாறு ஆசிய வளர்ச்சி வங்கியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கோரியுள்ளார்.
ஜப்பானின் யோகஹாமா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிய வளர்ச்சி வங்கியின் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வளரும் நாடுகளுக்குத் தேவையான கடன்களை வழங்குவதில் ஆசிய வளர்ச்சி வங்கி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனினும், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, வங்கியின் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.
உதாரணத்துக்கு, கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்கும், கடன் தொகையை வழங்குவதற்குமான கால அளவு மிக அதிகமாக உள்ளது. இந்த நடைமுறை விரைவுபடுத்தப்பட வேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கி தனது 50-ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த வேளையில், வங்கியின் சாதனைகளைப் பின்னோக்கிப் பார்ப்பது மட்டுமின்றி, அதன் செயல்பாட்டை மேலும் சிறப்பானதாக்க செய்ய வேண்டியவை குறித்தும் ஆராய வேண்டும்.
ஆசிய-பசிபிக் பகுதியில் வறுமையை ஒழிப்பது ஆசிய வளர்ச்சி வங்கியின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, மரபுசாரா எரிசக்தித் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் வளரும் உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை விவசாயத்தை நம்பியே உள்ளன. எனவே, பருவமழை பொய்ப்பது போன்ற காரணங்களால் அவர்கள் பாதிப்புக்குள்ளாத வகையில், விவசாயத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, விளைபொருள்களுக்கு சிறப்பான சந்தையை ஏற்படுத்துவது ஆகியவற்றிலும் ஆசிய வளர்ச்சி வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்றார் அருண் ஜேட்லி.
1960-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிய வளர்ச்சி வங்கியில் 67 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வளரும் உறுப்பு நாடுகளில் பொருளாதார, சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த வங்கி கடனுதவி, தொழில்நுட்ப உதவி, நிதியுதவி ஆகியவற்றை அளித்து வருகிறது. இதன் 67 உறுப்பு நாடுகளில் 48 நாடுகள் ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தவை.

முழு கட்டுரையைப் படிக்க →