முகப்பு
இந்தியா

தலாக் விவாகரத்து இஸ்லாமிய அடிப்படை உரிமையா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் முத்தலாக் விவாகரத்து முறை, விவாகரத்து பெற்ற தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும்

இந்தியா

தலாக் விவாகரத்து இஸ்லாமிய அடிப்படை உரிமையா? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் முத்தலாக் விவாகரத்து முறை, விவாகரத்து பெற்ற தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:30 PM
பகிர்:

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் முத்தலாக் விவாகரத்து முறை, விவாகரத்து பெற்ற தம்பதியர் மீண்டும் சேர்ந்து வாழ்வதில் சிக்கலை ஏற்படுத்தும் நிக்கா ஹலாலா முறை ஆகியவற்றுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

முத்தலாக் விவாகரத்து முறை முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது குறித்து முதலில் விசாரிக்கப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முத்தலாக் விவாகரத்து முறைக்கு எதிரான மனுக்கள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் பலதார திருமணம், முத்தலாக் விவகாரத்துடன் தொடர்புடையது அல்ல என்பதால், அது தொடர்பாக தற்போதைய வழக்கில், விவாதம் நடைபெறாமல் போகலாம்.
ஆனால், முத்தலாக் விவாகரத்து முறை முஸ்லிம்களின் அடிப்படை உரிமையா? என்பது குறித்து நீதிமன்றம் முக்கியமாக விசாரிக்கும்.
அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் முத்தலாக் விவாகரத்து முறையும் இடம்பெற்றுள்ளதா? என்பது முதலில் விசாரிக்கப்படும். ஒருவேளை, முத்தலாக் விவாகரத்து முறை, மதத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமை என்ற முடிவுக்கு வந்துவிட்டால், அது சட்டப்படி செல்லுபடியாகுமா? என்ற கேள்விக்குள் நீதிமன்றம் செல்லாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மனுதாரர்களில் ஒருவரான சாய்ரா பானு சார்பில் மூத்த வழக்குரைஞர் அமித் சிங் சத்தா ஆஜராகி, விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:
முத்தலாக் விவாகரத்து முறை, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றல்ல. இந்த வாதத்துக்கு அருகில் உள்ள பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் வலுசேர்க்கின்றன என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், முத்தலாக் விவகாரம் தொடர்பாக, பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, முத்தலாக் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறுகையில், ""முத்தலாக் விவகாரம், ஒரு பிரச்னை அல்ல. கணவன், மனைவி ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படாவிடில், முத்தலாக் நடைமுறை முழுமை பெற்றதாகக் கருதப்பட மாட்டாது'' என்றார். இதே கருத்தை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞரும், முன்னாள் அமைச்சருமான கபில் சிபலும் குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →