இந்தியா

தேஜஸ் விமானம் மூலம் வெற்றிகரமாக ஏவுகணைச் சோதனை

DIN

"தேஜஸ்' போர் விமானம் மூலமாக விண்ணில் உள்ள இலக்குகளை அழித்து தாக்கும் ஏவுகணைச் சோதனை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
"தேஜஸ்' போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணையானது மற்ற ஏவுகணையை போல் அல்லாமல் இலக்குகளை நீண்ட தொலைவிலிருந்தும் தாக்கக் கூடியது.
போர்க்காலங்களில் எதிரி நாடுகளின் விமானங்களை நீண்ட தொலைவிலிருந்தும் பின்தொடர்ந்து சென்று தாக்கக் கூடிய வகையில் நவீன சென்சார் கருவிகள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், இந்த ஏவுகணைச் சோதனையானது ஒடிஸா மாநிலம், சண்டீபூர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. அப்போது, சோதனைக்காக பறக்கவிடப்பட்ட சிறிய ரக விமானத்தை நீண்ட தொலைவுக்கு அப்பால் வந்த தேஜஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட ஏவுகணை தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணைச் சோதனை வெற்றியானது, இந்திய விமானப் படையின் நவீன தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT