முகப்பு
இந்தியா

சனிக்கிழமைகளில் 'பள்ளிப் பை இல்லாத நாள்': உ.பி. அரசு பரிசீலனை

சனிக்கிழமைகளில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிப் பை கொண்டு வராமல் பள்ளிக்கு வர வழி வகை செய்வது குறித்து உத்தரப்பிரதேச அரசு பரிசீலனை செய்து வருகிறது.

Updated On : 13 மே, 2017 at 11:44 AM
பகிர்:


லக்னௌ: சனிக்கிழமைகளில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளிப் பை கொண்டு வராமல் பள்ளிக்கு வர வழி வகை செய்வது குறித்து உத்தரப்பிரதேச அரசு பரிசீலனை செய்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநில துணை முதல் தினேஷ் ஷர்மா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இது குறித்து பரிசீலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமைகளில், பள்ளிக்கு வரும் சிறார்கள், பாடப் புத்தகப் பையைக் கொண்டு வராமல், அன்றைய தினம் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தினால், பள்ளி மாணாக்கருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், இதுபோன்ற செயல்களால், பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்ல நட்புணர்வு வளரவும் வாய்ப்பு ஏற்படும்.

ஏற்கனவே, யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு, பள்ளிச் சிறார்கள் காக்கி சீருடையை மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.