இந்தியா

மரபணு மாற்ற கடுகுக்கு அனுமதி: ஆய்வுக்குட்படுத்த நாடாளுமன்றக் குழு திட்டம்

DIN

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு ரகங்களை பயிரிடுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட விவகாரத்தை ஆய்வுக்குட்படுத்த நாடாளுமன்ற நிலைக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளதரி தலைமையிலான இக்குழு, மரபணு மாற்ற கடுகின் சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து அதுதொடர்பான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தரிக்காயைத் தொடர்ந்து மரபணு மாற்றம் செய்யபப்பட்ட கடுகையும் இந்தியாவுக்குள் அனுமதிக்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தச் சூழலில், மத்திய மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, அந்த வகை கடுகுக்கு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இத்தகைய பயிர்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகினால் ஏற்படும் சாதக பாதகங்கள், சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு (அறிவியல் - தொழில்நுட்பம், சுற்றுச்சூழல்) ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த ஓரிரு வாரங்களில் நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் இருந்தபோது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்க அவர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT