முகப்பு
இந்தியா

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே தில்லியில் இன்று காலமானார்

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே திடீரென உடல்நலக் குறைவால் தில்லியில் இன்று காலை காலமானார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:33 PM
பகிர்:

புது தில்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே திடீரென உடல்நலக் குறைவால் தில்லியில் இன்று காலை காலமானார்.

மாதவ் லால் தவே, புஷ்பா தேவிக்கு மகனாப் பிறந்தவர் அனில் மாதவ் தவே. 60 வயதாகும் இவர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள பட்நகரை சேர்ந்தவர். இவர் நேற்று மாலை வரை அரசுப் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீர் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் செயல்பட்ட வந்த இவர் தன்னுடைய பணியை முழு கவனத்துடனும், தெளிவுடனும் செயல்பட்டு வந்தவர். மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக ஆழ்ந்து செயல்பட்டவர் தவே என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →