இந்தியா

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும்

DIN

எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி உறுதிபடத் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். காஷ்மீரில் நடைபெற்றும் வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தினார். இந்நிலையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எல்லையில் நமது ராணுவ வீரர்கள் எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். எல்லையில் நமது வீரர்களின் செயல்திறன் என்னை வியப்படைய வைக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தந்தை பாகிஸ்தான் எந்த வகையில் மீறினாலும் அதற்கு நமது ராணுவம் உரிய பதிலடி கொடுக்கும். பயங்கரவாதமும், தீவிரவாதமும் இந்தியாவின் இறையாண்மைக்கும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் எதிரானவை. மாநில மக்கள், பாதுகாப்புப் படையினரின் பக்கம் உள்ளனர்.
தேசத்துக்கு எதிராக யார் வன்முறையில் ஈடுபட்டாலும், அவர்களது செயல்களுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாவார்கள். மாநிலத்தின் அமைதியின்மை ஏற்படுத்துவதற்காகவே சில அமைப்புகள் பெருமளவில் பணத்தைச் செலவிட்டு வருகின்றன.
மாநில மக்களின் உயிர்களைப் பறிக்க வேண்டும்; பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. அவர்களின் சதி இந்தியாவுக்கு எதிரானது மட்டுமல்ல, காஷ்மீரில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரானது. மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள். அமைதி நிலவினால்தான் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
ராணுவம் மிகவும் பொறுப்புள்ள அமைப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாநில மக்களைக் காக்கும் நோக்கில்தான் ராணுவம் செயல்படுகிறது.
தேர்தலில் வாக்களிக்க விரும்பும் மக்களை ராணுவம்தான் பாதுகாத்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடும் கும்பலையும் ராணுவம்தான் எதிர்கொள்கிறது. அந்தச் சூழ்நிலையில் அமைதியை நிலைநாட்டுவது ராணுவத்தின் முக்கியப் பணியாக உள்ளது.
ஒரு பிரிவினரை மனிதாபிமானத்தோடு அணுகும் அதே நேரத்தில் மற்றொரு பிரிவினரை ராணுவ நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதைத்தான் ராணுவம் செய்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT