இந்தியா

உலக மருத்துவ தரவரிசை: 154-ஆவது இடத்தில் இந்தியா

DIN

உலக மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இந்தியா 154-ஆவது இடத்தை வகிக்கிறது. இந்தப் பட்டியலில் சீனா, வங்கதேசம், நேபாளம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மருத்துவ இதழான "தி லான்ùஸட்', மருத்துவ சேவைகள் குறித்து 195 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 154-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகள், மருத்துவ சேவையில் இந்தியாவைவிட அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்கின்றன.
இந்தியாவில் காச நோய், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இருதய நோய் ஆகியவற்றுக்கு எதிராக வழங்கப்படும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்று அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், மருத்துவ சேவையில் பின்தங்கியுள்ள ஆசிய நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், சரியான சிகிச்சை மூலம் தவிர்க்கக் கூடிய மரணங்களின் எண்ணிக்கை அடிப்படையிலான தரவரிசையில், இந்தியா கடந்த 1990-ஆம் ஆண்டு பெற்றதைவிட 14.1 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னேறியுள்ளது.
சர்வதேச மருத்துவ சேவைத் தர வரிசையில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தையும், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களையும் வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் சீனாவுக்கு 82-ஆவது இடமும், இலங்கைக்கு 73-ஆவது இடமும் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT