முகப்பு
இந்தியா

தலைக்கவசம் இல்லையெனில் பெட்ரோல் கிடையாது: உத்தரப் பிரதேசத்தில் இன்று முதல் புதிய விதி அமல்

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தலைக்கவசம் இல்லையெனில் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

Updated On : 22 மே, 2017 at 3:19 PM
பகிர்:

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் தலைக்கவசம் இல்லையெனில் பெட்ரோல் கிடையாது என்ற புதிய விதியை அம்மாநில அரசு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது.

மக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும். இல்லையெனில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரப் பிரேதேச அரசு புதிய திட்டத்துக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்தத் திட்டம் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் மக்களை நெறிப்படுத்த நல்லதொரு திட்டமாக அமையும் என்று கூறியுள்ளனர். இந்த உத்தரவைச் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் விதமாக லக்னோ போலீசார் பெட்ரோல் நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுக்குக் கடந்த 3 நாட்களாகப் பயிற்சி அளித்தனர்.

Advertisement

சீட் பெல்ட் கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவை லக்னோவில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.