இந்தியா

பிரதமர் மோடி இன்று 4 நாடுகளுக்குப் பயணம்

DIN

ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை செல்கிறார்.
பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவில் முதலீடு செய்ய அந்நாடுகளின் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கவும் மேற்கண்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.
தில்லியிலிருந்து தனிவிமானம் மூலம் திங்கள்கிழமை ஜெர்மனிக்கு மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர், அந்நாட்டின் அதிபர் ஃபிரான்க்-வால்டர் ஸ்டெயின்மியரையும் அவர் சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளமான முகநூலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன்மேம்பாடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, ரயில்வே மற்றும் விமானப்போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இனிவரும் காலங்களில் கூடுதல் ஒத்துழைப்பை அளிப்பது தொடர்பாக மெர்கலுடன் கலந்தாலோசனை நடத்த இருக்கிறேன் என்று அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் தொழிலதிபர்களுடன் இரு தலைவர்களும் வர்த்தம், முதலீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அங்கிருந்து ஸ்பெயினுக்கு மோடி செவ்வாய்க்கிழமை செல்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு அந்நாட்டுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
அங்கு, மன்னர் 6-ஆவது ஃபிலிப்பையும், அந்நாட்டு அதிபர் மரியானோ ரஜோயையும் அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அங்கிருந்து ரஷியாவுக்குச் செல்லும் அவர் வரும் 31-ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 18-ஆவது இந்திய-ரஷிய மாநாட்டில் பங்கேற்கிறார். அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்த உள்ளார். கடைசியாக பிரான்ஸýக்கு அவர் செல்கிறார். அங்கிருந்து நாடு திரும்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT