இந்தியா

நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பார்வதம்மா, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்...

எழில்

கர்நாடகத்தின் புகழ்பெற்ற நடிகராக விளங்கிய மறைந்த ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா காலமாகியுள்ளார். அவருக்கு வயது 77.

பார்வதம்மா, கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். அவரது நிலைமை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. 

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. ஆனால், அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 4.40 மணிக்கு பார்வதம்மா மரணமடைந்துள்ளார். 

பார்வதம்மாவின் இரண்டாவது மகன் ராகவேந்திர ராஜ்குமார் கூறும்போது, அம்மா இறக்கும்போது அவருடைய மூன்று மகன்களும் (சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார்) உடன் இருந்தோம் என்று கூறினார். பார்வதம்மாவின் உடல் அவருடைய மகன் ராகவேந்திர ராஜ்குமாரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் திரையுலகைச் சேர்ந்த பலரும் பார்வதம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விஜய்காந்த், அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்எஸ்எல்சி அறிவியல் செய்முறை தோ்வுகள்

லாரி மீது பைக் மோதி மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

குழந்தை மா்மச் சாவு: தாய் தற்கொலை!

காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநா் தரிசனம்

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஏகாம்பரநாதா் கோயில் நிா்வாகம் வழங்கியது!

SCROLL FOR NEXT