விவசாயிகள் தற்கொலை: ஆட்சியர்களிடம் அறிக்கை கோரும் ஒடிஸா அரசு
பூச்சிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
பூச்சிகளின் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பயிரிழப்பு காரணமாக பர்கர் மாவட்டத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களில், பர்கர் மாவட்டத்தில் தனது சோளப் பயிரைப் பூச்சிகள் தாக்கியதையடுத்து வயலுக்குத் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயியும் ஒருவர். இதையடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பர்கர், பொலாங்கிர், கஞ்சாம், காலாஹண்டி, கோராபுட், நுவாபாடா, சம்பல்பூர், சுவர்ணாபூர் ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு கூடுதல் நிவாரண ஆணையர் மிஹிர் சந்த் மல்லிக் கடிதம் எழுதியுள்ளார்.