இந்தியா

'இந்தியாவின் மூத்த வாக்காளர்'- வாக்களித்தார்!

ஹிமாச்சல சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவின் மூத்த வாக்காளர்...

Raghavendran

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நவம்பர் 9 (இன்று) நடைபெற்றது. காலை 8 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது. 

மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் 337 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 19 பேர் பெண்கள் ஆவர். அதுபோல மொத்தம் 50 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இடம்பெற்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்தியாவின் மூத்த வாக்காளர் என்ற பெறுமையைக் கொண்ட ஷியாம் சரண் நேகி, வாக்களித்தார். இவர் அங்குள்ள கின்னாஊர் என்ற மாவட்டத்தின் கல்பா என்ற இடத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

1951-ம் ஆண்டு தனது முதல் வாக்கினைப் பதிவு செய்த ஷியாமுக்கு தற்போது 100 வயதாகிறது. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அதுமட்டுமல்லாமல் இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தனது வாக்கினைப் பதிவு செய்தது சிறப்பம்சமாகும்.

இந்தத் தேர்தலின்போது தனது இல்லத்தில் இருந்து வாக்குச்சாவடி வரை வந்து ஷியாம் வாக்களிக்கும் விதமாக அவருக்கு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும் வாக்குச்சாவடியில் கௌரவிக்கப்பட்டார். 

அனைவரும் நாட்டின் நன்மைக்காக பணிபுரிய வேண்டும் என்று வாக்களித்த பின்னர் ஷியாம் சரண் நேகி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்றாவது கண்!

வணிகம் சரி...சமூக நலன்...?

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

SCROLL FOR NEXT