மாணவி பலாத்கார வழக்கு: சிம்லா காவல்துறை உயரதிகாரி கைது
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 16 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிம்லா மாவட்ட காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் நெகியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியாமாணவி பலாத்கார வழக்கு: சிம்லா காவல்துறை உயரதிகாரி கைது
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 16 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிம்லா மாவட்ட காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் நெகியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் 16 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிம்லா மாவட்ட காவல் துறை முன்னாள் கண்காணிப்பாளர் நெகியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சிம்லா நகரின் கொட்ஹை பகுதியில் கடந்த கடந்த ஜூலை மாதம் 16 வயது மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தது.
இதுதொடர்பாக நேபாளத்தைச் சேர்ந்த 29 வயது தொழிலாளர் சுராஜ் சிங் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கொட்ஹை காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அப்போது, காவல் நிலையத்தில் சுராஜ் சிங் மர்மமான முறையில் இறந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சுராஜ் சிங்கை கொலை செய்ததாக செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ வசம் அந்த மாநில உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது. இதுதொடர்பாக, இதுவரை 9 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நெகியை நவம்பர் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.