இந்தியா

துப்பாக்கியால் சுடப்பட்டும் போராடி கொள்ளையர்களைத் தடுத்த ஏடிஎம் காவலாளி! (விடியோ) 

DIN

புதுதில்லி: கொள்ளையர்களால் உடலில் குண்டுக்காயம் பட்ட நிலையிலும், தில்லியில்  ஏடிஎம் காவலாளி ஒருவர் அவர்களைத் துணிச்சலாக தடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தில்லியின் மஜ்ரா தபாஸ் என்ற பகுதியில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் பைக்கில் வந்த ஹெல்மெட் அணிந்திருந்த  இரண்டு கொள்ளையர்கள் பணத்தைத் திருட முயற்சித்தனர்.

அதற்காக முதலில் வாயிலில் நின்றிருந்த ஏடிஎம் காவலாளியினை நோக்கி துப்பாக்கியில் சுட்டனர். சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு வராமல் இருக்க, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவலாளி உடலில் ரத்தப்போக்கு உண்டான பொழுதும், போராடி தொடர்ந்து அவர்களைத் திருட விடாமல் தடுத்துள்ளார்.

அவர் கையில் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியினையும் அவர்கள் பறித்த நிலையிலும் அவர் தளரவில்லை. இறுதியில் கொள்ளையர்கள் பணத்தினை திருடமுடியாமல் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

அதன்பின்னர் அங்கு கூடிய பொதுமக்கள் ஏடிஎம் காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தற்பொழுது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT