இந்தியா

பாகிஸ்தானின் கண்மூடித்தனமாக ‘ஷெல்’ தாக்குதலில் 3 சிறுவர், சிறுமியர் பலி; 25 பேர் காயம்

DIN

ஸ்ரீநகர்: பூஞ்ச் அருகே பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் கிராமங்களை குறிவைத்து கண்மூடித்தனமாக ‘ஷெல்’ தாக்குதலில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கெரி மற்றும் திக்வார் பகுதிகளில் எல்லை கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் இன்று திங்கள்கிழமை காலை 7.15 மணியளவில் அத்துமீறி துப்பாக்கி சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், கிர்னி செக்டாரில் 10 வயது சிறுவன் இஸ்ரர் அகமது உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக எல்லையில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபடும். எல்லையில் தொடர்ச்சியாக இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக எல்லைய ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கிரண் செக்டாரில் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர். அதன்பின்னர், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், கிரனி செக்டாரில் பகுதியில் உள்ள 12 கிராமங்கள் மீது குறி வைத்து பாகிஸ்தானியர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 10 வயது சிறுவன், 15 வயதுடைய சிறுமி, சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT