இந்தியா

நோபல் பரிசு வென்ற இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவிய '37 இந்திய விஞ்ஞானிகள்'

Raghavendran


ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், 2017-ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அதன் குழுத்தலைவர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார். ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ்  மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை பெறுகின்றனர். விருதுத் தொகையான ரூ.7 கோடியை மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீனின்  ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த கருத்தாக்கத்தினை இம்மூவரும் தங்கள் கூற்றின் மூலம் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில், இந்த மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்த ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த ஆராய்ச்சியில் 37 இந்திய விஞ்ஞானிகள் உதவி புரிந்துள்ளனர்.

இந்த 37 இந்திய விஞ்ஞானிகளும் புணேவில் செயல்பட்டு வரும் வான்வெளி ஆராய்ச்சி மற்றும் இயற்பியல் (ஐ.யூ.சி.ஏ.ஏ) உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள். 

'ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு குறித்த இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பில் எங்களின் பங்களிப்பு இன்றியமையாதது. ஏனென்றால் இது மிகப்பெரிய சவாலாக விளங்கியது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். பலர் இதனை இயலாத காரியம் என்று விமர்சித்தனர்' என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT