இந்தியா

5,000 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: 'ஜீவாமிர்தம்' திட்டத்தை ராம்நாத் கோவிந்த் துவக்கி வைப்பு

DIN

ஆன்மீகவாதி அமிர்தானந்தமாயி அவர்களின் 64-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது மடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், விமானம் மூலம் கேரளா வந்தடைந்தார். 

கேரள முதல்வர் பினரயி விஜயன், ஆளுநர் சதாசிவம் ஆகியோர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை வரவேற்றனர். 

இந்நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் அமைந்துள்ள அமிர்தானந்தமாயி மடத்துக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த வந்தடைந்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது நாடு முழுவதும் 5,000 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஜீவாமிர்தம் திட்டத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT