இந்தியா

தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கார் திருட்டு!

DIN

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் கார் வியாழக்கிழமை திருடப்பட்டது.

தில்லி சட்டப்பேரவை வளாகத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பயன்படுத்தும் நீல நிற வேகன்-ஆர் ரக கார் திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தில்லி முழுவதும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. முதல்வரின் கார், அதுவும் சட்டப்பேரவை வளாகத்தின் அருகில் இருந்து திருடப்பட்டதே இந்த ஆச்சரியத்துக்கு காரணம்.

முதல்வரின் கார் திருடப்பட்ட சம்பவம் குறித்து தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி அமைப்பாக இருந்து பின்னர் அரசியல் கட்சியாக பிரவேசித்தபோது அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான குந்தன் ஷர்மா என்பவரால் இந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் ரொக்கப்பணம் ஆகியன வழங்கப்பட்டது.

அப்போது தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தின் போது இந்த காரில் தான் அர்விந்த் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியை சரிவர அர்விந்த் கெஜ்ரிவால் வழிநடத்துவது இல்லை என்று குற்றம்சாட்டி குந்தன் ஷர்மா பிரிந்து சென்றது தனிக்கதை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT