முகப்பு
இந்தியா

பைக்கில் வந்த மர்மநபர்களால் பாஜக எம்எல்ஏ ஐஃபோன் அபேஸ்!

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் பாஜக எம்எல்ஏ-விடம் இருந்த ஐஃபோனை திருடிச் சென்றனர். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

தில்லியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் ஐஃபோன் திருடு போனச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமார். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அவர், தனது இல்லம் அருகே உள்ள ரோஹினி செக்டார்-23ல் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் பாஜக எம்எல்ஏ ஜிபேஷ் குமாரிடம் இருந்த பிரபல ஐஃபோன் 7 ரக மொபைல் ஃபோனை திருடிச் சென்றுவிட்டனர்.

தன்னிடம் இருந்து ஐஃபோனை பைக்கில் வந்த அந்த 2 இளைஞர்களும் பிடுங்கிச் சென்றபோது அதனை ஜிபேஷ் குமார் தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் தப்பித்து விட்டனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருடர்கள் குறித்த அடையாளங்களை எம்எல்ஏ ஜிபேஷ் குமார் காவல்துறையிடம் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →