இந்தியா

சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் வழக்கு: இன்று உச்ச நீதிமன்றம் முக்கிய முடிவு

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றுவதா? இல்லையா? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முடிவு செய்ய இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா (இப்போதைய தலைமை நீதிபதி) தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பான தங்கள் முடிவை கடந்த பிப்ரவரி மாதம் நிறுத்தி வைத்தது.
முன்னதாக, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி மனு தாக்கல் செய்த இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 10 முதல் 50 வயது பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை இருக்கும் என்பதால் கோயிலில் புனிதத்தன்மையை பராமரிக்க முடியாது என்ற காரணத்தால் அவர்களை கோயிலில் அனுமதிப்பதில்லை என்று ஐயப்பன் கோயில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், "சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற விதி, ஆண்களுக்கும், பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது என்று ஆகாது. 
இது குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது மட்டும்தான். மதரீதியாக இதுபோன்ற சில விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உதாரணமாக கேரள மாநிலத்திலேயே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை' என்றார்.
ஆனால், பொது நல மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மத வழிபாட்டில் ஆண், பெண் என பாகுபாடு காட்டுவது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சமஉரிமைக்கு எதிரானது என்று வாதிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT