முகப்பு
இந்தியா

அச்சுதானந்தன் பிறந்த நாள்: யெச்சூரி நேரில் வாழ்த்து

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், தனது 94-ஆவது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை (அக்.20) கொண்டாடினார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், தனது 94-ஆவது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை (அக்.20) கொண்டாடினார்.
தேசிய அளவில் குறிப்பிடத்தக்க மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கும் அச்சுதானந்தனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, ஆதரவாளர்கள் மற்றும் கட்சியனர் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை அச்சுதானந்தன் கொண்டாடினார். ஏழ்மையான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த அவர், பொதுவுடைமைக் கொள்கைகள் மீது வைத்திருந்த தீராப் பற்றினால் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் உதயமானபோது அச்சுதானந்தனும் அதில் இணைந்தார். கட்சியின் அடிமட்டத்திலிருந்து பணியாற்றி தலைமைப் பொறுப்புக்கு அவர் உயர்ந்தார். கடந்த 2006 - 2011 காலகட்டத்தில் கேரளத்தின் முதல்வராகப் பதவி வகித்த அச்சுதானந்தன், அதன் பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார்.
தற்போது கேரளத்தில் ஆட்சி புரிந்து வரும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசில் சீர்திருத்தக் குழுத் தலைவராக அச்சுதானந்தன் பொறுப்பு வகித்து வருகிறார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →