இந்தியா

அமித் ஷா மகனை சிபிஐ விசாரிக்காதது ஏன்? லாலு கேள்வி

DIN

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்தது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் அவரிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை? என்று ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகார் மாநிலத்தின் முதல் முதல்வரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 130-ஆவது பிறந்த தின விழா பாட்னாவில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக லாலு பிரசாத் பங்கேற்றார். அவருடன் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமார், கேரள முன்னாள் ஆளுநர் நிகில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் லாலு பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியுடனும் சரி; அதன் தலைவர்களுடனும் சரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ளது. தேசியக் கட்சியான காங்கிரஸூம், நாங்களும் (ஆர்ஜேடி) பல்வேறு தருணங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளோம்.
மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சாமானிய மக்களைப் பாதிக்கும் வகையிலேயே உள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பலதரப்பட்ட மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரிலேயே அவை நடைபெறுகின்றன.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு குறுகிய காலத்தில் பல மடங்கு அதிகரித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் அவரிடம் விசாரிக்காதது ஏன்? என்று லாலு கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT