முகப்பு
இந்தியா

உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசம் மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை

Updated On : 22 அக்டோபர், 2017 at 5:42 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:26 PM

லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் மிஸ்ரா என்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர் நேற்று மாலை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தின் லக்மிபூர் கேரி மாவட்டம் மஜ்ஹாரா கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவரான பல்ராம் ஸ்ரீவஸ்டவா(55) என்பவர் நேற்று சனிக்கிழமை மாலை அவரது வீட்டின் அருகே உள்ள சாலையில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் இரண்டு பாஜக பிரமுகர்கள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.