இந்தியா

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால் எழுந்து நிற்க வேண்டும்: அரசு ஊழியர்களுக்கு உ.பி. அரசு சுற்றறிக்கை! 

DIN

லக்னௌ: சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அலுவலகத்திற்கு வரும் போதும், போகும் போதும் எழுந்து :நிற்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு உத்தரப்பிரதேச மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜிவ்குமார் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க மக்கள் பிரதிநிதிகள் வரும் போதும், போகும்போதும், அரசு ஊழியர்கள்  கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும். இது மரியாதையை வெளிப்படுத்தும் செயல். இந்த உத்தரவின்படி எழுந்து நிற்காத அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ,க்களின் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கடிதங்களுக்கு உடனடியாக பதில் தர வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசு ஊழியர்கள் தங்களை மதிப்பதில்லை  என்று பல அமைச்சர்கள், உத்தரப்பிரதேச மாநில முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்தே தலைமைச் செயலாளர் மூலமாக மேற்கண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT