இந்தியா

உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிப்பு

Raghavendran

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மேலும், 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 22, 26, 29 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 16 மாநகராட்சி, 198 நகராட்சி மற்றும் 439 கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது.

இதில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT