இந்தியாவின் பொதுக்கடன் எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 சதவீதமாக
புதுதில்லி: இந்தியாவின் மொத்த பொதுக்கடன் ரூ.61.13 லட்சம் கோடியிலிருந்து 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 சதவீதமாக இருந்தது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொது கடன் மேலாண்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், முந்தைய காலாண்டில் 1.15 சதவீத சரிவு ஏற்பட்டதுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டிற்கான முதல் காலாண்டில் ஒப்பிடுகையில் 1.6 சதவீத உயர்வுடன் இந்தியாவின் மொத்த பொதுக்கடன் 3.6 சதவிகிதம் உயர்ந்து ரூ 63.35 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 2017 ஜூன் மாதத்தில் உள்நாட்டின் கடன் 93 சதவிகிதமாக இருந்தது என்றும், நிதிச்சந்தையின் கடன் 83.2 சதவிகிதமாக இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலேயே மத்திய அமைச்சகங்கள் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கியுள்ளதால், அதற்காக அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பெறும் முதல் காலாண்டின் கடன் தொகை 60 ஆயிரம் கோடி என சுட்டிக்காட்டியுள்ளது.
Advertisement
அமைச்சரகங்களின் செலவினங்கள் பெருமளவில் திருப்பியளிக்கும் வகையிலேயே உள்ளது. பொதுவாக ஆண்டின் முதல் பாதியில் குறைவான பணப்புழக்கங்களுடன் இணைந்துள்ளது. "இந்த காலாண்டில் மிகைப்பற்று (ஓவர் டிராஃப்ட்) சுருக்கமாகக் கிடைத்தள்ளது," மேலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஓதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.