இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தின வாழ்த்து

DIN

புதுதில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் வர்க்கத்திற்கு தலைவணங்குகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், சமுதாயத்தில் சிந்தனை வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சியான கல்விக்காக மனதை வளர்த்துக்கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்த ஆசிரியர்கள் சமூகத்திற்கு தலை வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், தலை சிறந்த ஆசிரியராகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்த டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT