இந்தியா

பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாக். தூதரிடம் இந்தியா கண்டனம்

DIN

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தாற்காலிக (பொறுப்பு) தூதர் ஹைதர் ஷாவை நேரில் அழைத்து, எல்லையில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி நடத்தியத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஹைதர் ஷாவிடம் பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்குமாறு சில ஆலோசனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றும் வெளியுறவு அமைச்சகம் அளித்தது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஹைதர் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் டிஎன்ஏ மாதிரிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கிவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு கடந்த மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவில் புல்வாமா மாவட்டத்தில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கும் அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT