இந்தியா

ம.பி. அரசு மருத்துவமனையில் மேலும் 24 குழந்தைகள் பலி

DIN

மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 24 குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
அந்த மாநிலத்தில் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஷாதல் நகர அரசு மருத்துவமனையில் பிறந்த 36 குழந்தைகள் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தன. 
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:
உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்த 94 பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனை சிறப்புப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டன. அதில் 24 குழந்தைகள் வியாழக்கிழமை உயிரிழந்தன. அந்தக் குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போதே மிகவும் உடல்நலம் குன்றியிருந்தன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 60 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மருத்துவமனையில் பிராண வாயு உருளை பற்றாக்குறையாக இருந்ததன் காரணமாகவே அந்தக் குழந்தைகள் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT