இந்தியா

மும்பையில் மாடியில் இருந்து குதித்து இசைக்கலைஞர் தற்கொலை

DIN

மும்பை: பெங்களூரை சேர்ந்த இடைக்கலைஞர் கரன் ஜோசப்(29) குடிபோதையில் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த இசைக்கலைஞர் கரன் ஜோசப்பின் நண்பர் ரிஷிஷா, மும்பை புறநகர் பகுதியான பாந்த்ரா புல்லக் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது தளத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடன் கடந்த ஒரு மாத காலமாக இசைக்கலைஞர்களுடன் தங்கி வந்துள்ளார் இசைக்கலைஞர் கரன்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8.450 மணியளவில் ரிஷிஷா மற்றும் நண்பர்களுடன் அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் ஜன்னல் மீது ஏறி கரன் ஜோசப் கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலையின் போது கரன் ஜோசப் குடிபோதையில் இருந்தார்.

அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. புலன் விசாரணைக்காக அவரது செல்போன் தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து ஜோசப்பின் பெற்றோர் மற்றும் சகோதரர் சனிக்கிழமை இரவு மும்பை வந்தனர். அவர்களிடம் ஜோசப்பின் உடலை போலீஸார் ஒப்படைத்தனர்.

பாந்த்ரா காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் சம்பவம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT