இந்தியா

புதுச்சேரியில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ  மாணவர்கள் நீக்கம்!

DIN

புதுச்சேரி: விதிமுறைகளை மீறி சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2016-17 ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சேர்க்கை நடைமுறைகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக பரவலாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெற்றதாகக் கூறி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் இருந்து 770 மருத்துவ மாணவர்கள் நீக்க இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT