இந்தியா

ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற சிறுமிக்கு எச்ஐவி தொற்று: கேரளாவில் அவலம்

DIN

திருவனந்தபுரம்: கேரளாவில் ரத்தப் புற்றுநோய் தாக்கி ரத்த மாற்று சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சையின் போது, சிறுமியின் கண்களில் ஒன்று வீங்கியிருப்பதைப் பார்த்த மருத்துவர், உடனடியாக ரத்தப் பரிசோதனை உட்பட பல மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார். அதில், அந்த சிறுமிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ரத்தப் புற்றுநோய்க்கு, ரத்தமாற்று சிகிச்சை அளித்த போதுதான் இந்த கொடிய நோய் பாதித்திருக்கும் என்று புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குநரிடம், சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா அறிக்கைக் கோரியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT