இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பானிஹால் பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பானிஹால் பகுதியில் இன்று காலை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த இரண்டு பயங்கரவாதிகள் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஆரிப் மற்றும் கசான்பர் என அடையாளம் தெரிந்தது. மேலும், அவர்கள் கடந்த 20-ம் தேதி பணிஹாலில் நடைபெற்ற துணை ராணுவ படையினர் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பானிஹால் பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் உள்ளூரை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறகு. இந்த தேடுதல் வேட்டை தொடரும் என தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT