இந்தியா

நாங்கள் கடவுள் அல்ல! மனுதாரரிடம் கோபப்பட்ட நீதிபதிகள்

DIN

மனிதர்களால் இயலாத காரியங்களை செய்து முடிக்க நாங்கள் ஒன்றும் கடவுள் அல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கொசுக்களை முழுமையாக அழிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றின் மீதான விசாரணையின்போது இவ்வாறு கோபத்துடன் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பின்னர் அந்த மனுவையும் அவர்கள் நிராகரித்தனர்.
கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருவதால், அவற்றை அழிக்க உரிய நெறிமுறைகளை வகுக்க ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தனேஷ் லெஷ்தான் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அது, நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கு கொசுக்கள் இருக்கிறதா அல்லது ஈக்கள் இருக்கிறதா என்று கண்காணித்து எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாட்டில் உள்ள கொசுக்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்றால் அது கடவுளால் மட்டுமே முடியும். அத்தகைய செயலை செய்து முடிக்க நாங்கள ஒன்றும் கடவுள் அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், சம்பந்தப்பட்ட மனுவை நிராகரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT